Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

Dec 04, 2025,03:53 PM IST

- அ.சீ.லாவண்யா


சென்னை: ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய பாதுகாப்பு மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. முன்பதிவு கவுண்டர்களில் டிக்கெட் பதிவு செய்ய வரும் பயணிகள் இனி ஒவ்வொருவரும் ஓ.டி.பி மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த மாற்றம், தட்கல் டிக்கெட்டுகள் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரயில்வே துறையால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.


புதிய நடைமுறையின் மூலம், பயணிகள் முன்பதிவு செய்யும்போது தங்களது கைப்பேசியில் வரும் ஒற்றை முறை பாஸ்வேர்டை (OTP) வழங்கி மட்டுமே பதிவை முடிக்க முடியும். இதனால் நபரின் உண்மை அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு பிரச்னைகள் குறையும் என அதிகாரிகள்  நம்புகின்றனர்.




மேலும், முன்பதிவு கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் ஏஜெண்ட்கள் மூலம் நடைபெறும் தவறான முன்பதிவு செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் குறையும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.


பயணிகள் இந்த புதிய முறையை வரவேற்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவின் தெளிவு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும் மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. ரயில்வே துறை, எதிர்காலத்தில் கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்.


(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்