உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்.. தவிப்பில் தமிழர்கள்.. உதவி எண்கள் அறிவிப்பு

Oct 09, 2023,02:06 PM IST

- சகாயதேவி


சென்னை: ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தமிழர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


ஹமாஸ் அமைப்பின் திடீர் தாக்குதலால் நிலை குலைந்த இஸ்ரேல் தற்போது பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் மற்றும் விமானப்படை ஒருங்கிணைந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா முனையை சின்னாபின்னமாக்கி வருகிறது. அவர்களின் வெறித்தனமான தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.




இந்த நிலையில் இஸ்ரேலில்  வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. அதேசமயம், அங்கிருந்து பலர் கிளம்பி தாயகம் வரும் தகவல்களும் வெளியாகியுள்ளன.இந்தப் பின்னணியில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மாநில அரசு உதவக் களம் இறங்கியுள்ளது.


தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு  உதவி எண்களையும் அரசு அறிவித்துள்ளது. இந்த உதவி எண்களைப் பயன்படுத்தி தேவையான உதவிகளைப் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


அரசு அறிவித்துள்ள உதவி எண்கள்:


0-87602-48625

0-99402-56444

0-96000-23645



இமெயில் முகவரி: 


nrtchennai@tn.gov.in 

nrtchennai@gmail.com


இஸ்ரேலிலிருந்து மீட்க 30 தமிழர்கள் கோரிக்கை


இதற்கிடையே ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் 30 தமிழர்கள் தங்களை மீட்குமாறு கோரி அயலக தமிழர் நல வாரியத்தை அணுகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


இவர்கள் அனைவரும் என்ஜீனியர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள். அயலக தமிழர் நல வாரியத்துடன் இவர்கள் தொடர்பு கொண்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரவித்துள்ளனர். இருப்பினும் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் இஸ்ரேலை விட்டு கிளம்ப அவர்கள் நினைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து இவர்களை பத்திரமாக மீட்க மத்திய வெளியுறவுத்துறை மூலம் இந்தியத் தூதரகத்தை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்