20வது மாடியிலிருந்து விழுந்து.. ஓயோ ரூம்ஸ் நிறுவனரின் தந்தை மரணம்!

Mar 11, 2023,10:35 AM IST
டெல்லி: இந்தியா முழுவதும் பிரபலமான ஓயோ ரூம்ஸ் ஹோட்டல் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் பர்சாத் அகர்வால், தான் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 20வது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். 

ஹரியானாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள டிஎல்எப் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார் ரமேஷ் அகர்வால். செக்டார் 54ல் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.  இந்த நிலையில் அந்த குடியிருப்பின் 20வது மாடியிலிருந்து ஒருவர் கீழே விழுந்து விட்டதாக செக்யூரிட்டிகளிடமிருந்து காவல்துறைக்கு போன் போனது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கீழே விழுந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஏற்கனவே  அவர் இறந்திருந்தார்.




போலீஸ் விசாரணையில்தான் அவர் ரமேஷ் அகர்வால் என்று தெரியவந்தது. தனது தந்தையின் மரணம் குறித்து ரித்தேஷ் அகர்வால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எனது தந்தை ரமேஷ்அகர்வால் மார்ச்  10ம் தேதி மரணமடைந்தார் என்ற வருத்தமான செய்தியை உங்களுடன் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். எங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.  அவரது வாழ்க்கை எங்களுக்குப் பாடம்.  எங்களது குடும்பத்துக்கு அவரது மரணம் பேரிழப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.

மார்ச் 7ம் தேதிதான் ரித்தேஷ் அகர்வாலின் திருமண வரவேற்பு டெல்லி தாஜ் பாலஸ் ஹோட்டலில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. அதுதான் ரமேஷ் அகர்வால் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். உலகின் மிகப் பெரிய வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் மகன் வரவேற்பு முடிந்த கையோடு ரமேஷ் அகர்வால் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்