ஒத்தசடை போட்டு ஒரு ரோஜா காதோரம்!

Jul 27, 2026,01:32 PM IST

- பாவலர் மாயோன்மங்கை


பாவாடை தாவணியிலெ 

பாத்துப் பாத்து  ரசிச்சவ நான்


படிக்கப் போயிவந்தே

துடிக்குதடி மாமன் நெஞ்சு


ஒத்தசடை போட்டு ஒரு

ரோஜா காதோரம்


காதலைச் சொல்லும் கையைப் பிடித்து இழுக்கச் சொல்லும்


வெளியூருக்கு  போனாயே  

வெட்கமுமே  விட்டுவந்தாய்


நீண்ட சடை காணோம்

நெத்தியிலே  பொட்டு

காணோம்


உதட்டுலே சாயத்தத்தான் ஒப்பனையா  காட்டறயே


மாமனெப் பார்த்தாக்கா

மாராடை  இழுத்து விட




மஞ்சள் முகம் சிவப்பாகும் 

சந்தனமேனி சிலிர்ப்பாகும்


அத்தான்  நான்  பார்க்க வேண்டி

பாதக் கொலுசுகளே


பாட்டுக்கேத்த தாளமிடும்  

பாவை விழி  அலைபாயும்


என்னாச்சுடி உனக்கு

ஏன் இந்த அலங்கோலம்


கண்களில் மருட்சி இல்லெ

பாதங்களோ  பாடவில்லை


மாராடை சரிசெய்யும்

விரல்களுக்கோ வேலை இல்லை


எனக்கும்

விளங்கவில்லை

வேறே ஊர் போனா

விலகிடுமா  பண்பாடு


தாராளமா பேர்சொல்லுறே

தானா வந்து பேசுனா

தவிர்க்கறே


பெண்களே  ஆண்களைப்

பித்தாக்கும் உத்திகள்

உங்களிடமே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்