பெஷாவர்: பாகிஸ்தானின் குவெட்ட ரயில் நிலையத்தில் இன்று நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரயில் நிலையத்தின் டிக்கெட் பதிவு மையத்தில்தான் குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குண்டு வெடித்துள்ளது. இதனால் இந்த வெடிகுண்டு, ஜாபர் எக்ஸ்பிரஸுக்கு வைக்கப்பட்ட குறியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக வெடிகுண்டு வெடித்த சமயத்தில் ரயில் அங்கு வந்திருக்கவில்லை. வழக்கமாகவே இந்த ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். குண்டுவெடிப்பு நடந்த சமயத்திலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. எனவே உயிர்ப்பலியும் அதிகமாகும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு வெடிப்பு குறித்து மாவட்ட சிறப்பு எஸ்பி முகம்மது பலூச் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் இது மனித வெடிகுண்டுத் தாக்குதலாக தெரிகிறது. இருப்பினும் விரிவான விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும். தற்போது ஆதாரங்கலை சேகரித்து வருகிறோம். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்படவுள்ளது என்றார்.
சம்பவம் நடந்த குவெட்ட ரயில் நிலையம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது. பலூச் பிரதேச மக்கள் நீண்ட காலமாக தனி நாடு கோரி போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}