டெல்லி: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், மீண்டும் ஒருமுறை தனது அபத்தமான பேச்சால் இணையத்தில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இம்முறை, "ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஒளி வெள்ள விளக்குகளை (floodlights) நாங்கள்தான் ஹேக் செய்தோம்" என்று அவர் காமெடியான ஒரு கூற்றை முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய ஆசிப், தங்கள் நாட்டின் "சைபர் போர்வீரர்கள்" (இணைய வீரர்கள்) இந்தியாவில் நடந்த ஓர் ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் மைதானத்தின் விளக்குகளை அணைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதாவது மே 8 அன்று தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
அந்தப் போட்டி நடந்தபோது, அப்பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மின்வெட்டு ஏற்பட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் மீது இந்தியா 'ஆபரேஷன் சிந்துர்' என்ற பெயரில் இராணுவத் தாக்குதலை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு நடந்தது. இத்தாக்குதல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இவை அனைத்தும் பாகிஸ்தானின் சொந்தத் தொழில்நுட்பம் என்பதை இந்தியா புரிந்துகொள்வதில்லை. எங்கள் சைபர் போர்வீரர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தினர். ஒரு கிரிக்கெட் மைதானத்தில் விளக்குகளை அணைத்தனர் – விளக்குகள் அணைந்ததால் ஐபிஎல் போட்டி தடைபட்டது. இந்திய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது, மின் கட்டமைப்பு முடப்பட்டது என்று ஆசிப் தம்பட்டம் அடித்துள்ளார்.
ஆசிப்பின் இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பயனர்கள் அவரை கடுமையாகக் கேலி செய்து வருகின்றனர்.
"பாகிஸ்தானில் 'சைபர்' என்றாலே வெவ்வேறு கோட்பாடுகளும், பாடத்திட்டங்களும் இருக்குபோல!" என்று ஒருவர் கிண்டலாக எழுதினார்.
மற்றொருவர், "ஐபிஎல் வெள்ள விளக்குகள் வைஃபை மூலம் இயங்காது, அவை பாதுகாப்பான மின்சார அமைப்புகளால் செயல்படுகின்றன. வீட்டு ரூட்டரை ஹேக் செய்வதுபோல இதைச் செய்ய முடியாது. மைதான விளக்குகளை அணைப்பதற்குக் 'சைபர் தாக்குதல்' என்று சொல்வது, நீங்கள் மதரசாவில் படித்தீர்கள் என்பதைத்தான் நிரூபிக்கிறது, அறிவியல் வகுப்பில் அல்ல. அடுத்த முறை, ஸ்கோர்போர்டையாவது ஹேக் செய்யப் பாருங்கள் – அதில் பொத்தான்களாவது இருக்குமே!" என்று நையாண்டி செய்துள்ளார்.
"விளக்குகளை அணைப்பது ஒரு சைபர் வெற்றி என்றால், என் மூன்று வயது மருமகன் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்! அவன் ஒருமுறை ஜூம் மீட்டிங்கின்போது வைஃபையைத் துண்டித்தான்," என்று ஒரு பயனர் சிரிப்புடன் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அமைச்சர் ஆசிப், சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாவது இது முதல் முறையல்ல. 'ஆபரேஷன் சிந்துர்' நடந்த சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் விமானப்படை ஐந்து இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியதற்கு ஆதாரம் கேட்கப்பட்டபோது, "அது சமூக வலைத்தளங்களில் உள்ளது" என்று பதிலளித்தார். அப்போது, தொகுப்பாளர், "நீங்கள் பாதுகாப்பு அமைச்சர். சமூக வலைத்தளங்களில் உள்ள விஷயங்களைப் பற்றிப் பேச நான் இங்கு வரவில்லை. எனக்குத் தெளிவாக ஆதாரம் வேண்டும்," என்று கேட்டபோது, அவரால் தனது கூற்றுகளை நிரூபிக்க முடியவில்லை. அப்போதும் அவர் கிண்டலுக்குள்ளானார் என்பது நினைவிருக்கலாம்.
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
Feelings are the language of the soul .. ஆன்மாவின் மொழிதான் உணர்வு!
எரிந்த கடிதத்தின் வாசனை!
துயரம் கொடுக்கும் உறவுகளின் இருண்ட பக்கங்கள்
Paavalar Maayon Mangai Poem: வழிகிறதே வழிகிறதே!
மலாய் மட்டன் கோஃப்தா.. செம டேஸ்ட்டி.. சாப்பிட்டா சூப்பர் திருப்தி!
மே 18.. மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் பயங்கரம்!
The Terrace That Stored Our Summers.. வெயில் மட்டுமல்ல.. நினைவுகளும்!
Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்
{{comments.comment}}