இஸ்லாமாபாத்: நாட்டில் சிக்கலான பொருளாதாரம் நிலவுவதால் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது பதவிக்காலம் முடியும் வரை தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறி விட்டார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீஃப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி அதிபராக தேர்ந்தெடுப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து ஆசிப் அலி சர்தாரியை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தாவின் 14வது அதிபராக மார்ச் 10ம் தேதி ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்றார்.
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தனது பதவிக் காலம் முடியும் வரை தனக்கு சம்பளம் வேண்டாம் என்று அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கருவூலத்தில் மேலும் சுமையை ஏற்றுவதை தவிர்க்கும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ பதிவை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இவர் ஏற்கனவே அதிபராக இருந்தவர் மட்டும் அல்ல. மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!
ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
{{comments.comment}}