ஹைதராபாத்: இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் உலகக் கோப்பை வீரர் முஷ்டாக் அகமது ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
50 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அந்த நாட்டு மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் 6ம் தேதி விளையாடவுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் அது நெதர்லாந்து அணியைச் சந்திக்கிறது. இதைத் தொடர்ந்து 10ம் தேதி இலங்கையுடன் மோதும்.
அக்டோபர் 14ம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த மைதானத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு முன்னாள் ஜாம்பவான் முஷ்டாக் அகமது சில அறிவுரைகளைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவைப் பொருத்தவரை 12 வீரர்களுடன் அந்த அணி விளையாடும். இந்திய அணிக்காக குரல் கொடுத்து எப்போதும் முழக்கிட்டபடி இருக்கும் ரசிகர்கள்தான் அந்த 12வது வீரர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குரல் கொடுப்பார்கள். எனவே விளையாடும்போது ரசிகர்களின் ஆரவாரம் ஜாஸ்தியாகவே இருக்கும். அதைக் கண்டு பாகிஸ்தான் வீரர்கள் பதட்டமாகி விடக் கூடாது. இதை எதிர்பார்த்தே விளையாடச் செல்ல வேண்டும். பல வீரர்கள் இந்தியாவில் முதல் முறையாக விளையாடுகிறார்கள். அவர்கள் தங்களது ஃபோகஸை இழந்து விடாமல் நிதானமாக ஆட வேண்டும்.
பாகிஸ்தான் அணியால் எந்த சூழலையும் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன். எனவே சிறந்த வெற்றியை அந்த அணியைப் பெறும் என்றும் நம்புகிறேன் என்றார் முஷ்டாக் அகமது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}