இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், 10 போலீஸார் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைபர் பக்துன்வாலா மாகாணத்தில் உள்ள டிராபன் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், இன்று அதிகாலை 3 மணி அளவில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளனர். கையெறி குண்டுகள் மற்றும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு காவல் நிலையத்தை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில் பரிதாபமாக 10 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 6பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை நேர இருளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பித்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வருகிற 8ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் மக்கள் பதட்டத்தில் உறைந்து உள்ளனர்.
ஏற்கனவே பாலுசிஸ்தான் மாகாணம், காலட் நகரில் தேர்தல் அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}