கூடலூர்: டிரோன் கேமரா மூலம் சிறுத்தையைக் கண்டறிந்து, அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து, 2 முறை மயக்க ஊசி போட்டு அதைப் பிடித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒரு சிறுத்தை கடந்த 2 மாதமாக நடமாடி வந்தது. இந்த சிறுத்தை பந்தலூர், கூடலூர் சுற்றுப் பகுதிகளில் நடமாடி வந்தது. அவ்வப்போது ஆடு, மாடுகளைப் பிடித்துச் சென்றது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.
அவ்வப்போது வனத்திலிருந்து வெளியேறி கால்நடைகளை தாக்கி வந்த சிறுத்தை, கடந்த மாதம் பழங்குடியினர் குடியிருப்புக்குள் புகுந்தது. வீட்டிலிருந்து வெளியே வந்த சரிதா என்ற பெண்ணை சிறுத்தை கடித்ததால் அவர் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அதே நாளில் மேலும் இருவரை காயப்படுத்தியது சிறுத்தை.

இதையடுத்து சிறுத்தையை உடனடியாக பிடிக்கக் கோரி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு 6 இடங்களில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் 15 இடங்களில் சிசிடிவி கேமராக்களும் வைக்கப்பட்டன. அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து சிறுத்தையைப் பிடிக்க 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று நான்சி என்ற 3 வயது சிறுமியை சிறுத்தை தாக்கியதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மக்கள் பெரும் கொந்தளிப்புக்குள்ளானார்கள். நேற்று விடிய விடிய பந்தலூர் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதுமலையிலிருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டது. அதில் ஒரு யானையில் ஏறிக் கொண்டு வனத்துறை டாக்டர் ராஜேஷ்குமார் சென்றார். பெருங்கரைப் பகுதியில் டிரோன் மூலமாக சிறுத்தை இருந்த பகுதி அடையாளம் காணப்பட்டு வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் துப்பாக்கி மூலமாக மயக்க ஊசி போடப்பட்டது. ஒரு ஊசி போட்டும் சிறுத்தை மயங்கவில்லை. அந்தப் பகுதியில் ஒரு புதரில் போய்ப் பதுங்கிக் கொண்டது. இதையடுத்து மீண்டும் ஒரு டோஸ் மயக்க ஊசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறுத்தை மயக்க நிலைக்குப் போய் விட்டது.
அதன் பின்னர் சிறுத்தையை வலை போட்டு பிடித்து அங்கிருந்து தூக்கி வந்தனர். கூண்டு வண்டியில் ஏற்றி அதை முதுமலைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பிடிபட்ட சிறுத்தையை தங்களிடம் காட்டாமல் வனத்துறையினர் முதுமலைக்கு கொண்டு போனதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}