பாரீஸ் : பாரீஸில் நடைபெற்று வரும் 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று 3 பதக்கங்களை வெல்லக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
முன்னதாக இந்தியா நேற்று தனது முதல் பதக்கத்தை வென்றது. துப்பாக்கிச் சுடும் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2024 ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் ஜூலை 26ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான ஜூலை 28ம் தேதி இந்தியாவின் மானு பாக்கர், துப்பாக்கி சுடும் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இது இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கமாகும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லுவதற்காக மானு 12 ஆண்டுகள் காத்திருந்து, போராடி, இதனை பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி, போனில் மானுவை தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மானு, வெறும் 0.1 புள்ளிகளில் வெள்ளி பதக்கத்தை தவற விட்டுள்ளார். இருந்தாலும் 22 வயதாகும் மானு, இந்தியாவை பெருமை அடைய வைத்துள்ளார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த செய்தியை கேட்டு நான் மிகவும் பெருமை அடைகிறேன். நாட்டிற்காக முதல் பதக்கத்தை வென்ற முதல் பெண்மணி நீங்கள். வாழ்த்துக்கள். டோக்கேயா ஒலிம்பிக்கில் நீங்கள் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் அனைத்தில் இருந்தும் மீண்டு வந்து, இப்போது வெற்றி பெற்றுள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருந்த பதிவில், இது வரலாற்று சிறப்பு மிக்க பதக்கம், இந்தியாவிற்கு கிடைத்துள்ள முதல் பதக்கம். துப்பாக்கி சுடுதலில் முதல் பெண் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளதால் இது தனிச்சிறப்பு வாய்ந்த பதக்கம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி திரெளபதி முர்முவும் மானுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல் பிரிவில் தென்கொரியாவின் ஏ ஜின் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இவர் 243.2 புள்ளிகள் எடுத்துள்ளார். தென் கொரியாவின் கிம் ஏஜி வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார். இவர் 241.3 புள்ளிகள் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை பிடித்துள்ள மானு, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிற்கு தகுதி பெற்றுள்ளார்.
இதற்கு முன் இந்தியா 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்றது. விஜயகுமார், 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். அதற்கு பிறகு தற்போது தான் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை மானு பெற்றுள்ளார்.
இன்று மேலும் 3 பதக்க வாய்ப்பு

இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு மேலும் 3 பதக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரமீதா ஜின்டால் இன்று பங்கேற்கிறார். இதில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. அதேபோல ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா பங்கேற்கவுள்ளார்.
ஆடவர் வில்வித்தை அரை இறுதியில் இந்தியா மோதவுள்ளது. அதில் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு அது தகுதி பெறும். அதில் வென்றால் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு அது முன்னேறும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}