பாரீஸ் : பாரீசில் நடைபெற்று வரும் 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கும், பெண்களுக்கான மகளிர் மல்யுத்தத்தில் வினேஷக் போகத் அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளனர். இதனால் இந்தியாவிற்கு மேலும் இரண்டு பதக்கங்கள் உறுதியாகி உள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒலிம்பிக் பதக்கம் பட்டியலில் இந்தியா தற்போது 60 வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.
சாதனைப் பெண் வினேஷ் போகத்

இந்த நிலையில், இந்திய பளுதூக்கும் வீராங்கணையான வினேஷ் போகத், அரையிறுக்கு முன்னேறி உள்ளார். பெண்களுக்கான 50 கிலோ எடை தூக்கும் பிரிவில் இவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் பளு தூக்கும் வீராங்கணை என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் உக்ரைன் வீராங்கணை ஓசானா லிவாசை 7-5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் வினேஷ்.
அரையிறுதிப் போட்டியில் க்யூபா நாட்டை சேர்ந்த யுஸ்னெய்லிஸ் குஸ்மானை, வினேஷ் எதிர்கொள்ள உள்ளார். ஒருவேளை இவர் தங்கம் பதக்கம் வென்றால் இது அது இந்தியாவிற்கு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கிடைக்கும் முதல் தங்க பதக்கமாக இருக்கும்.
டெல்லி வீதிகளில் போராடிய வீராங்கனை

வினேஷ் போகத்தின் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது. காரணம், சில மாதங்களுக்கு முன்பு டெல்லி வீதிகளில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷனின் பாலியல் சித்திரவதைகளுக்கு எதிராக சக வீரர்கள், வீராங்கனைகளுடன் போராடியவர் வினேஷ். காவல்துறையால் கடுமையான நடவடிக்கைகளுக்குள்ளாக்கப்பட்டவர். சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் கடுமையாக அவமதிக்கப்பட்டவர்.
இன்று ஒலிம்பிக்கில் அவருக்கு நிச்சயம் வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அவரது வேகத்தைப் பார்த்தால் தங்கப் பதக்கமே வெல்வார் என்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள். அப்படி நடந்தால் அதை விட சிறந்த வெற்றி இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு கிடைக்காது என்பதால் ஒட்டுமொத்த இந்தியாவும் அதைக் கொண்டாட உற்சாகத்துடன் காத்திருக்கிறது.
நீரஜ் சோப்ரா

நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, பைனலுக்கு முன்னேறி உள்ளார். இவர் 89.34 மீட்டர் எறிந்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் வீரர் 86.59 மீட்டர் எறிந்துள்ளார்.
நீரஜ் சோப்ரா, 2021ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தான் முதல் முறையாக பங்கேற்றார். அதில் அவர் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்றார். இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய இரண்டாவது பதக்கத்தை பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடி வருகிறார். ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 08ம் தேதி நடக்கிறது. இந்திய நேரப்படி அன்று இரவு 11.50 மணிக்கு நடக்கிறது.
நீரஜ் 2022ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் 90 மீட்டர் வரை ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றுள்ளார். அதனால் இந்த முறை நிச்சயம் தங்க பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}