டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
17வது நாடாளுமன்றத்தின் (லோக்சபா) பதவிக்காலம் வருகின்ற ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதற்கு முன்னர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு புதிய அரசு அமைக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் 18வது நாடாளுமன்ற தேர்தலாகும்.
நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். பல நாட்களாக தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று கட்சிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா காரணமாக தேர்தல் தேதி தள்ளிப்போனதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு, 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும். முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும். கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தேதி குறித்த விவரங்களை வெளியிட்டனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}