சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் தமிழக சட்டபையின் 5 ஆம் நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது.

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர், நான் இந்த 5 ஆண்டு காலத்தில் எனக்கும், எனது மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு, தினந்தோறும் திட்டங்கள் தீட்டி உழைத்திருக்கிறேன். இந்த உழைப்பையும், வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று தமிழநாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர். உறுதியாக நாங்கள் தான் மீண்டும் வருவோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். மேலும் 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 2000ல் இருந்து ரூ.3.400 ஆக உயர்த்தப்படும் என்றும், கூடுதலாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். புதிதாக 2,600 கி.மீ கிராம சாலைகள் மேம்படுத்தப்படும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழக புதிதாக 1.80 லட்சம் நபர்களுக்கு ஒய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டம் முதலமைச்சரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துடன் நிறைவுபெற்றுள்ளது. இதனையடுத்து தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
சந்தோஷம்!
அமைதி, ஆரோக்கியம், செழிப்பு.. நேர்மறை ஆற்றலுக்கு வித்திடும்.. துளசி மாடம்!
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
உன் புன்னகை!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
தொடர்ந்து மக்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
{{comments.comment}}