- மஞ்சுளா தேவி
சென்னை: "நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமீர் அண்ணாவை காயப்படுத்தினால் நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய இண்ட்ஸ்ட்ரி ஹிட் கொடுத்த படம் பருத்தி வீரன். கார்த்திக்கு மிகப் பெரிய அறிமுகத்தை இது கொடுத்தது. தயாரிப்பாளராகவும் ஞானவேல்ராஜாவுக்கு பெரும் அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்த படம் இது.
நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமானார். நடிகர் பிரியாமணி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்காத பிரியாமணிக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கிடைத்தது. இப்படம் வெளியானபோதே ஏகப்பட்ட பிரச்சினைகளுடன்தான் வெளியானது. அமீர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கித்தான் இப்படத்தை இயக்கி முடித்தார். இது அப்போதே பெரிதாக பேசப்பட்டது.

இந்த நிலையில், படம் வெளிவந்து 17 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் மீண்டும் இதுதொடர்பான சர்ச்சை வெடித்தது. இயக்குனர் அமீர் பருத்திவீரன் இயக்கியதால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். மேலும் அமீர் குறித்து பல்வேறு வார்த்தைகளையும் அவர் பிரயோகித்திருந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
அவரது பேச்சு, அவர் பயன்படுத்திய வார்த்தைகள், அவரது பாடி லாங்குவேஜ் மிகவும் அறுவறுக்கத்தக்க வகையில், வன்மத்துடன் கூடியதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். உச்சகட்டமாக இயக்குநர் பாரதிராஜ கடும் கோபத்துடன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். பாரதிராஜாவே கோபமாகி விட்டதால் திரைத்துறையினர் மொத்தமாக வெடித்துக் கிளம்பும் அபாயகரமான சூழல் உருவானது.
இதைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக தற்போது ஞானவேல்ராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஞானவேல்ராஜாவின் விளக்கம் என் பெயரில் அந்த அறிக்கை வெளியாியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதைப்பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் அவரை கூப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழ வைக்கும் சினிமா துறையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என்று கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.
தனது அறிக்கையில், இயக்குநர் அமீர் கூறிய பொய்யான குற்றச்சாட்டுகள் என்று ஞானவேல்ராஜா குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தப் பிரச்சினை இப்போதைக்கு ஓயுமா என்று தெரியவில்லை.
இதற்கிடையே, மன்சூர் அலிகான் விவகாரத்தில் ஏகப்பட்ட திரையுலக சங்கங்கள் கிளர்ந்தெழுந்து வந்து திரிஷாவுக்கு ஆதரவாக பேசியிருந்தன. ஆனால் இயக்குநர் அமீர் விவகாரத்தில் எந்த சங்கமும் கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக சில இயக்குநர்கள் மட்டுமே கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலக ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் பாரதிராஜா கூட சங்கத்தின் சார்பாக கண்டனம் தெரிவித்து அறிக்கை விடவில்லை, மாறாக தனிப்பட்ட ரீதியில்தான் அவர் அறிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}