சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் புகழாரம் சூட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதற்கான முதல் மாநாட்டை கடந்த 27ம் தேதி பிரம்மாண்டமாக நடித்தினார் விஜய். அந்த மாநாட்டில் விஜய் வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார். அந்த உரை குறித்து தற்போது வரை தமிழகத்தில் பரபரப்பான விவாதம் ஒடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவரவர் கருத்துக்களை காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர். விஜய் பேச்சு குறித்த பரபரப்பு இன்றும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புகழஞ்சலி:
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலில் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}