மும்பை: ஐபிஎல் 2024 தொடரில் மிகப் பெரிய அளவில் பணத்தை வாரி அள்ளிட்டுப் போகப் போவது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்சல் ஸ்டார்க்கும், பாட் கம்மின்ஸும்தான். இருவரையும் சேர்த்து ரூ. 50 கோடிக்கு ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருவரும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வரை விளையாடும் வாய்ப்பைப் பெற்றால் மிகப் பெரிய அளிவில் பணத்தை அள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
பாட் கம்மின்ஸை ரூ. 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மறுபக்கம் மிட்சல் ஸ்டார்க்கை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த இருவரும்தான் இப்போது ரசிகர்களின் டாக் ஆப் தி ஆச்சரியமாக உள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஐபிஎல்லைப் பொறுத்தவரை மிகவும் சராசரியான புள்ளிவிவரத்துடன் உள்ளார் அவர். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி பெரிதாக இதுவரை அவர் ஜொலித்தது இல்லை. ஆனால் அவரை ஏன் 20 கோடிக்கு வாங்கிப் போட்டிருக்கிறது சன்ரைசர்ஸ் என்பதுதான் பலரது ஆச்சரியமாக உள்ளது.
அவரை அனேகமாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்காகத்தான் அவரைப் பிடித்து வைத்திருக்கிறது சன்ரைசர்ஸ் என்று சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா அணியை உலகக் கோப்பையைத் தட்டிச் செல்ல சிறப்பாக வழி நடத்தியவர் அந்த அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் என்பதால் அவர் மீதான கிராக்கி அதிகரித்துள்ளது. அவர் சரியாக விளையாடாவிட்டாலும் கூட, அணியை சிறப்பாக வழி நடத்தி கப்பைத் தட்டி வந்தால் போதும் என்ற எண்ணத்தில் சன்ரைசர்ஸ் இருக்கலாம் என்று தெரிகிறது.
பாட் கம்மின்ஸைப் பொறுத்தவரை இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான வருடம் என்பதில் சந்தேகம் இல்லை. உலகக் கோப்பையை வென்றார்.. அதேபோல இங்கிலாந்தில் ஆஷஷ் தொடரை வென்றார்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வென்றார்.. இப்படி வெற்றிகரமான வருடமாக பாட் கம்மின்ஸுக்கு 2023 அமைந்துள்ளது. இந்த வரிசையில் முத்தாய்ப்பாக இப்போதைய ஏலம் வந்து சேர்ந்துள்ளது.
பாட் கம்மின்ஸ் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எப்படி சம்பாதிக்கப் போகிறார் என்பதுதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. பாட் கம்மின்ஸுக்கு ஒரு போட்டிக்கு 1 கோடி சம்பளமாக கிடைக்கும். ஒரு ஓவருக்கு ரூ. 25 லட்சம் கிடைக்கும்.. ஒரு பந்து வீசினால் ரூ. 4 லட்சம் கிடைக்கும்.. அதாவது அத்தனை போட்டிகளிலும் விளையாடி, அத்தனை போட்டிகளிலும் அவருக்குரிய 4 ஓவர்களை வீசினால் இதெல்லாம் நடக்கும்.
பாட் கம்மின்ஸ் இதுவரை 42 ஐபிஎல் போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். 45 விக்கெட்களைத்தான் எடுத்துள்ளார். அவரது பந்து வீச்சு சராசரி 30.16 ஆகும். 2014ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அறிமுகமானார். 2022 வரை விளையாடினார். அவரது சர்வதேச ரெக்கார்டுகளும் கூட பெரிதாக இல்லை. 50 டி20 போட்டிகளில் ஆடி 55 விக்கெட்களை அவர் வீழ்த்தியுள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}