மும்பை : one97 communications ன் பேடிஎம் நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான(COO- chief operating officer) பவேஷ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நொய்டாவில் செயல்பட்டு வரும் சிஇஓ அலுவலகத்தின் உயர்மட்ட ஆலோசனை குழுவை சேர்ந்த உயர்மட்ட நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்த ராஜினாமா செய்ததன் விளைவாக இவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் பவேஷ் குப்தா, தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கம்பெனியின் பங்கு வர்த்தக நிலவரத்தை கருத்தில் கொண்டு மே 04ம் தேதி மாலைக்கு பிறகே பவேஷ் குப்தாவின் ராஜினாமா குறித்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி பேடிஎம் நிறுவனத்தின் தலைமை மாற்றம் குறித்த அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த நிறுவனத்தையும் மறுகட்டமைப்பு செய்ய உள்ளதால் இந்த தலைமை நிர்வாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேடிஎம் மனியின் முன்னாள் தலைவர் வருண் ஸ்ரீதர், தற்காலிகமாக பேடிஎம் சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பை கவனிக்க உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இவர் மியூச்சுவர் ஃபண்ட், நிதி மேலாண்மை ஆகியவற்றை பொறுப்பெடுத்து கவனிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு fisdom stock broking business அமைப்பின் முன்னாள் சிஇஓ.,வாக இருந்த ராகேஷ் சிங், பேடிஎம் மனியின் புதிய சிஇஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேடிஎம் வங்கி மீது ரிசர்வ் வங்கி பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் பேடிஎம் நிறுவனம் தடுமாற்றத்தில் உள்ளது நினைவிருக்கலாம்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}