எமனாக வந்த "AI".. நூற்றுக்கணக்கான ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த பேடிஎம்!

Dec 25, 2023,05:43 PM IST

டெல்லி: பேடிஎம் செயலியின் தாய்க் கம்பெனியான ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனம் தனது குழுமத்தில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.


இவர்களில் பெரும்பாலானவர்கள் சேல்ஸ் மற்றும் என்ஜீனியரிங் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த நிறுவனம் சமீபத்தில் செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பத்தை தனது பணிகளில் அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு வேலை போய் விட்டது.


செலவுக்குறைப்பை கருத்தில் கொண்டே இந்த செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பத்தை ஒன்97 நிறுவனம் அறிமுகப்படுத்தியது.  திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலைகளை ஊழியர்களை வைத்து மேற்கொள்வதால் செலவு அதிகரிப்பதாக கருதிய ஒன்97 நிறுவனம் அந்த வேலைகளில் ஈடுபட்டிருப்போரை நீக்கி விட்டு அங்கெல்லாம் ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்து விட்டது.




அது மட்டுமல்லாமல் வேலை துரிதமாக நடக்கும், பிசிறு இருக்காது, தவறுகள் இருக்காது, குழப்பம் இருக்காது, தாமதம் இருக்காது என்று பல்வேறு காரணங்களால் ஏஐ தொழில்நுட்பத்தை கையில் எடுத்திருப்பதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் 10 சதவீத ஊழியர்களை நீக்கவும் அது திட்டமிட்டுள்ளது. இதனால் பெருமளவில் செலவு குறையும் என்றும் புதிய திட்டங்களில் கவனம் செலுத்த முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.


அதேசமயம், பல்வேறு விரிவாக்கத் திட்டங்களையும் கையில் வைத்துள்ளது பேடிஎம். இந்தியாவுக்கான புதிய திட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார். இந்த நிறுவனத்தில் தற்போது கிட்டத்தட்ட 10,000 பேர் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2021ம் ஆண்டு கிட்டத்தட்ட 700 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது பேடிஎம் என்பது நினைவிருக்கலாம். இப்போது மேலும் சில நூறு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்