கான் யூனிஸ், தெற்கு காஸா: காஸாவின் தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் விலகியதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அந்த ஊரில் எதுவுமே மிச்சம் இல்லை என்றும் எல்லாமே அழிந்து போய் விட்டதாகவும் மக்கள் கண்ணீருடன் கூறியுள்ளனரம்.
வீடுகள் எல்லாம் தரைமட்டமாகி விட்டது. மண்ணோடு மண்ணாகக் கிடக்கிறது. எங்களது வாழ்வாதாரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் வாசம்தான் வீசுகிறது. வெறும் குப்பை மேடு போல இருக்கிறது எங்களது ஊர். என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை என்று காஸா மக்கள் கண்ணீருடன் கூறினர்.
ராணுவத்தால் சிதிலமாக்கப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளில் பல பிணங்கள் கிடக்கின்றனவாம்., பல உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அதை சரி செய்யும் பணியில் மக்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

கான் யூனிஸ் நகரம் காஸாவின் தென் பகுதியில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.. இஸ்ரேல் ராணுவத்துக்கும் - ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரில் யூனிஸ் நகரமும் சிக்கிக் கொண்டது. இங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்த மக்களுக்கு வெறும் மண் மேடும், கட்டடட இடிபாடுகளும்தான் மிச்சம் உள்ளன. பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து விட்டன.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளிகளின் சண்டையில் சிக்கி நகரமே சின்னாபின்னமாகியுள்ளது. நகரின் அனைத்து முக்கியப் பகுதிகளும் சேதமடைந்துள்ளன. அல் சலாம் மருத்துவமனை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இஸ்ரேல் படையினரின் குண்டு வீச்சில் இந்த மருத்துவமனையும் கடும் சேதமடைந்துள்ளது. அந்தக் கட்டடத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு கடுமையாக சேதமடைந்து நிற்கிறது மருத்துவமனை.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காஸா மீதான இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் தொடங்கியது. ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சரமாரியாக சுட்டுக் கொன்றும், ஏவுகணை வீசித் தாக்கியும் கொன்றதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தனது கோரத் தாக்குதலைத் தொடங்கியது நினைவிருக்கலாம். காஸாவை நிர்மூலமாக்கி விட்டு இப்போது இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் பதில் தாக்குதலில் கிட்டத்தட்ட 33,175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}