அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள்.. டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம்.. பாலமேடு ஜல்லிக்கட்டில் பதாகை!

Jan 15, 2025,10:26 AM IST

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது பார்வையாளர்கள் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிரான பதாகை வைக்கப்பட்டிருந்துத பலரையும் கவர்ந்தது.


மதுரை மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களை கட்டியுள்ளன. முதலில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தேறியது. முதல் பரிசை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 19 காளைகளைப் பிடித்து தட்டிச் சென்றார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. 1000 காளைகள், 900 காளையர்கள் என போட்டி அதிரடியாக போய்க் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போட்டியை திரண்டு வந்து பார்த்து ரசிக்கிறார்கள். ஏகப்பட்ட வெளிநாட்டுக்காரர்களும் போட்டியை கண்டு வியந்து கொண்டுள்ளனர்.




இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டைப் பார்வையிடும் மக்கள் வரிசையில் அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள், டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்ற பதாகையும் இடம் பெற்றுள்ளது. மேலூர் அருகே அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் பல ஆயிரம் பொதுமக்கள் திரண்டு மதுரை நோக்கி ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தி அதிர வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.


இந்தத் திட்டம் வராது என்று தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. நான் இருக்கும் வரை இத்திட்டம் வராது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்தத் திட்டம் வராது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் திட்டம் முழுமையாக இதுவரை கைவிடப்படவில்லை என்பதால்  மக்களின் போராட்டமும் தொடர்கிறது. அதன் எதிரொலியாகவே இந்த பாலமேடு பதாகை என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்