சென்னை: புரட்டாசி மாதம் நாளை பிறப்பதால் இன்றைய ஞாயிற்றுக்கிழமையை இனிமையாக முடிக்க மக்கள் கறிக்கடைகள், மீன் கடைகளுக்கு படையெடுத்ததால் அங்கு கூட்டம் அலை மோதியது.
புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் அந்த ஒரு மாதமும் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால் இந்த ஒரு மாதமும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் சற்று குறைந்து காணப்படும். இந்த நிலையில் நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது, கூடவே விநாயகர் சதுர்த்தியும் வருகிறது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டக்கடைசியாக ஒரு பிடி பிடித்துக் கொள்ளலாம் என்று மட்டன், சிக்கன், மீன் கடைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை அனைத்து இறைச்சிக் கடைகளில் நல்ல கூட்டம் காணப்பட்டது. காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலும் மீன் வரத்து வழக்கம் போல அதிகமாக இருந்தது. அதேபோல கூட்டமும் காணப்பட்டது. ஆனால் விலை பெரிதாக உயரவில்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் நிறைய வாங்கிச் சென்றனர்.
கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கூட மீன் விற்பனை இன்று அதிகமாக இருந்தது. சிக்கன் விற்பனையும் ஜோராக காணப்பட்டது. அதேசமயம், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாளை விநாயகர் சதுர்த்தி வருகிறது என்பதால் இன்றே வீடுகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இன்று அசைவம் சாப்பிடாமல் தவிர்த்ததையும் காண முடிந்தது. இதனால் மதுரையில் இறைச்சிக் கடைகளில் பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையும் காணப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}