ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!

Mar 20, 2026,05:29 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி பெரிய சேக்காடு பள்ளியில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் 42 மாணவர்கள் ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறளை எழுதி அசத்தினர்.


ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன் அவர்கள் கண்காணிப்பின் கீழ் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் உலக சாதனையாக பதிவு செய்து 42 மாணவர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கினார். சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி பெரியசேக்காடு என்னும் பெயரிலும் உலக சாதனை சான்று பள்ளிக்கு வழங்கப்பட்டது. 




42 மாணவர்களுக்கான உலக சாதனை சான்று தொகையையும் பள்ளிக்கான உலக சாதனை சான்று சாதனை தொகையையும் திருக்குறள் உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்த நல்லாசிரியர் லதா அவர்கள் தன் சொந்த செலவில் 10,250 தொகையை வழங்கி 42 மாணவர்களுக்கும் பள்ளிக்கும் உலக சாதனை சான்றை பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவருடைய செயலுக்கு பெற்றோரும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் மாமன்ற உறுப்பினர் அவர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும்  பொதுமக்களும்  கல்வியாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


ஆட்டோ வழி வீடு சந்திப்பில் அசத்தல்




பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆட்டோ வழி வீடு சந்திப்பு  நிகழ்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியை நல்லாசிரியர் லதா அவர்கள் மாமன்ற உறுப்பினர் சந்திரன் அவர்கள் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் லலிதா அவர்களையும் சந்தித்து மாணவர் சேர்க்கை பிரசுரங்களை அளித்து வீடு வீடாக பிரசுரங்களை அளித்தும் அரசு பள்ளியில் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறியும் பொது மக்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இதில் இரண்டு நாட்களில் ஆறு மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய செயல்பாடு பாராட்டுதலுக்குரியது என்று கல்வியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


விருதுகளைக் குவிக்கும் நல்லாசிரியர் கோ. லதா




நல்லாசிரியர் லதாவிற்கு கல்வித் தூதர் விருது . குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி விர்ச்சுவல் இன்ஸ்டிட்யூட் இல் இருந்து பாரதிய வித்யா பவன் மயிலாப்பூர் சென்னையில் நல்லாசிரியர் லதா அவர்கள் சீரிய சிறப்புமிகு கல்விப் பணியை பாராட்டி கல்வி தூதர் சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிறுவனர் Dr.மேனுவல் டாக்டர் வெங்கடேசன் வைஸ் சான்ஸ்லர் டாக்டர் ராமச்சந்திரா ஜாயின் டைரக்டர் டாக்டர் ரஜினி டாக்டர் வளர்மதி மற்றும் பலர் குளோபல் ஹுமன் பீஸ் யுனிவர்சிட்டியில் இருந்து நல்லாசிரியர் லதா அவர்களுக்கு குளோபல் எஜுகேஷன்  அம்பாசிடர்  கல்வி தூதர் விருதுச் சான்று பட்டம் வழங்கி கௌரவித்தனர்.


ஏற்கனவே பாரத் சேவா ரத்னா மற்றும் டாக்டர் ஆப் எஜுகேஷன் கௌரவப்பட்ட விருது சான்றுகளும் வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

news

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

news

பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

news

“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

news

முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

அதிகம் பார்க்கும் செய்திகள்