- மஞ்சுளா தேவி
டெல்லி: டீச்சர் என்றாலே தடித்த மூக்குக் கண்ணாடி.. கண்டிப்பான முகம்.. கடு கடு குரல்.. கையில் குச்சி.. இப்படித்தான் ஒரு காலத்தில் பலரும் பார்த்திருப்போம்.. ஆனால் இப்பெல்லாம் அப்படி இல்லை.. ரொம்ப ரொம்ப ஜாலியான டீச்சர்ஸ்தான் பலருக்கும் வாய்க்கிறது. அந்த அளவுக்கு டீச்சிங்கும் மாறி விட்டது.. டீச்சர்களும் மாடர்னாகி விட்டார்கள்.
ஆனால் எல்லா மாற்றங்களுமே நல்லதை நோக்கித்தான் என்பது மிகப் பெரிய ஆறுதலாகும். இந்தக் காலத்து மாணவர்களை உட்கார வைத்து சொல்லிக் கொடுப்பது வேலைக்கு ஆகாது.. அவர்களது போக்கிலேயே போய்த்தான் அவர்களை நல்வழிப்படுத்த முடியும். அதற்கு முக்கியத் தேவை.. அவர்களைப் போலவே டீச்சர்களுக்கும் மென்டாலிட்டி இருக்க வேண்டியுள்ளது. அதை இப்போதைய இளம் டீச்சர்கள் மிக மிக அழகாக செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட டீச்சரைத்தான் இப்போது இந்த வீடியோவில் பலரும் பார்த்து ஆனந்தித்து வருகிறார்கள். இந்த வீடியோவில் வரும் டீச்சர், சக மாணவிகளுடன் சேர்ந்து ஜாலியாக, உற்சாகமா, மகிழ்ச்சியாக, "குலாபி ஷர்ராரா".. பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது. பார்க்கவே படு க்யூட்டாக இருக்கிறது டீச்சரும், மாணவிகளும் நடனமாடுவது.

ஆசிரியர் பணி என்பது பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமின்றி அவர்களை வழிநடத்துவதும் தான். இப்படி காலம் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், வீடியோவில் ஆசிரியர் ஆடும் அழகு.. மாணவர்கள் ஆடும் விதம் .. ஒரே குஷியோ குஷியாக இருக்கிறது.. நீல நிற புடவையில் படு அழகாக இருக்கும் அந்த டீச்சர், சூப்பராக டான்ஸ் ஆடுகிறார். கூடவே அவரது மாணவிகளும் ஆடுகிறார்கள். பள்ளி வளாகத்திலேயே இந்த டான்ஸ் கச்சேரி நடக்கிறது. இவர்களுடைய இந்த குலாபி (ரோஜா) நடனம் பார்ப்பதற்கு பாடல் வரிகளுக்கு ஏற்ப மென்மையாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அடடா அடடா என்று வாவ் போட வைத்து விட்டார் அந்த டீச்சர்.
நமக்கும் இப்படி ஒரு டீச்சர் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மை ஏங்க வைத்து கனவும் காண வைத்து விட்டது. இந்த வீடியோவில் வரும் டீச்சரின் பெயர் காஜல் அசுதானி. இவர் ஒரு பிசிக்ஸ் டீச்சர் ஆவார். தனது டான்ஸ் குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு கண்டிப்பான ஆசிரியை. எனது பணியை ரசித்து செய்வேன். அதேசமயம், எனது மாணவிகளுடன் ஜாலியாகவும் இருப்பேன்.
ஒரு ஆனுவல் நிகழ்ச்சியின்போது ஆடிய நடனம் இது. படிப்பைத் தவிர எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகள்தான் ஒரு மாணவனை அல்லது மாணவியை முழுமையான திறமைசாலியாக்குகிறது. இந்த வீடியோவை எனது மாணவிகளின் சம்மதத்துடன்தான் எடுத்தேன். டான்ஸ் மீதும், கலை நிகழ்ச்சிகள் மீதும் எங்களுக்குள்ள வேட்கையை நீங்களே பார்த்திருப்பீங்க. உங்க எல்லோருடைய அன்புக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.
சூப்பர் டீச்சர்ல!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}