- சங்கமித்திரை
மதுரை: சூப்பர் நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தியேட்டர்கலில் வன்முறை ஏற்படுவதாக கூறி, அதைக் கட்டுப்படுத்தக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திடீரென ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
உச்ச நடிகர்களின் படங்களுக்கு இப்போதெல்லாம் வரலாறு காணாத ஹைப் கொடுக்கப்படுகிறது. அது ரஜினி படமாக இருந்தாலும் சரி, விஜய் படமாக இருந்தாலும் சரி.. ஹைப் கொடுத்தால்தான் படம் வசூலைக் குவிக்கிறது என்பதால் இவர்களைப் போன்ற நடிகர்களின் படங்களுக்கு அதிக அளவில் ஹைப் கொடுக்கப்படுகிறது.
இவர்களின் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடுகிறது. குறிப்பாக அவர்களின் படம் குறித்த ஒவ்வொன்றையும் டிரண்ட் செய்யவே பெரும் கூட்டத்தை வைத்து செய்கிறார்கள். சமீபத்தில் விஜய்யின் லியோ பட டிரைலர் தியேட்டர்களில் காட்டப்பட்டது. அப்போது சென்னை ரோகினி தியேட்டருக்குள் புகுந்த விஜய் ரசிகர்கள் சீட்டுகளையெல்லாம் ஏறி மிதித்து துவம்சம் செய்து விட்டனர். இது அனைவரையும் அதிர வைத்தது.
இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும் திரைப்படங்கள் ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுளளது. அய்யா என்ற சமூக ஆர்வலர் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார்.
புதிய திரைப்படங்கள் மற்றும் முன்னணி நட்சத்திர நாயகர்களின் புதிய பட ட்ரெய்லர் வெளியிடப்படும் போது ரசிகர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்;
ரசிகர்களின் காட்சியின் போது வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களால் உயிரிழப்பு மற்றும் பிற உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது மனுதாரர் மனுவில் கூறியுள்ளார். இந்த பொது நல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
ஏற்கனவே விஜய்யின் லியோ படம் தொடர்பாக அரசு பல்வேறு உத்தரவுகளை நேற்று பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் அய்யா என்பவர் புதிதாக ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}