பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்

Aug 27, 2025,10:31 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பிள்ளையார் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளான ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை ஆன இன்று விநாயகர் வழிபாட்டிற்கு உகந்த நைவேத்தியங்கள், 21 மலர்கள், 21 இலைகள் மற்றும் பழங்கள் பற்றி காண்போம்...


நமக்கு இயற்கையில் எளிமையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. எளிமையின் வடிவான விநாயகப் பெருமானுக்கு வன்னி இலைகள் கொண்டு செய்யும் ஆராதனை மிகவும் சக்தி வாய்ந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்றைய வழிபாட்டில் 21 மலர்களை கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமானது. இந்த வகையில் விநாயகருக்கு மிகவும் உகந்த மலர் 1.எருக்கம் பூ மற்றும்.2.தும்பை பூ இவை எளிமையாக ரோட்டோரங்களில் கிடைக்கும் தானே வளரும் தன்மை கொண்டவை. மேலும் 3.புன்னை பூ,4. மந்தாரை 5.மகிழம் பூ6. பாதிரி  7. அரளிப்பூ8. ஊமத்தை பூ 9.சம்பங்கி10. மாம்பூ 11..தாழம்பூ 12.முல்லை 13.கொன்றை 14..செங்கழுநீர் 15..செவ்வரளி 16..வில்வம் 17.. குரு ந்தை 18.. பவளமல்லி 19..ஜாதிமல்லி 20.மாதுளம் 21.கண்டங்கத்திரி ஆகிய 21 மலர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தவை ஆகும். 




விநாயகர் பெருமானின் மந்திரங்கள் அறியாதவர்கள் "கணபதியே போற்றி" என்று 21 முறை சொல்லி அர்ச்சித்தாலே போதுமானது.

21 இலை (பத்ரம்) பூஜை விநாயகருக்கு அர்ச்சனை செய்ய உகந்த இலைகள் யாதெனில்  1.மாசி  2.பருஹ திஎன்னும் கிளா இலை 3. வில்வம் 4. அருக்கு. 5. ஊமத்தை.6.இலந்தை7. நாயுருவி 8.துளசி9. மாவிலை10. தங்க அரளி 11.விஷ்ணு கிரந்தி12. மாதுளை 14.மருவு 15.நொச்சி16. ஜாதிக்காய் 17.வன்னி 18.அரசு 19.நுணா 20.எருக்கு 21 தேவதாரு என இந்த 21 இலைகள் விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தவை. இவைகளில் எந்த இலைகள் நமக்கு கிடைக்கிறதோ அதை வைத்து அர்ச்சனை செய்தாலே போதுமானது. விசேஷ பலன்கள் கிடைக்கும்.ஒவ்வொரு இலைக்கும் ஒரு விசேஷ பலன்கள் உண்டு.


மாதுளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் எதிரிகளின் சூழ்ச்சியினால் ஏற்பட்ட வழக்குகள் நல்ல முறையில் தீரும் என்றும், வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் செல்வநிலை பெறுவோம் என்றும்  ஊமத்தம் இலை கொண்டு அர்ச்சனை செய்தால் தீய குணங்கள் நீங்கும்.நெல்லி இலை கொண்டு அர்ச்சனை செய்தால் நிலையான வருமானமும் நல்ல இல்லறம் கிடைக்கும் என்றும் நாயுருவி இலை கொண்டு பூஜை செய்தால் நல்ல வசீகரமான தோற்றம் கிடைக்கும் என்றும், துளசி இலை கொண்டு அர்ச்சனை செய்தால் நல்ல ஆரோக்கியம் மேம்படும் என்றும் இப்படி ஒவ்வொரு இலைக்கும் ஒரு விசேஷ பலன்கள் உண்டு என்பதனால் நமக்கு கிடைக்கும் அருகாமையில் இருக்கும் இலைகளைக் கொண்டு 21 முறை கணபதியின் திருநாமங்கள் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.


 அருகம்புல் அர்ச்சனை செய்யும் பொழுது இரண்டு இரண்டாக அருகம் புல்  எடுத்து விநாயகரின் பாதத்தில் சமர்ப்பித்து அர்ச்சனை செய்வதனால் அற்புத பலன்களை பெறலாம். வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சினைகள், தொல்லைகள்,கடன், வறுமை போன்றவற்றால் துன்பப்படுபவர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபட அவை படிப்படியாக குறையும் என்பது ஐதீகம். அருகம்புல் மிகவும் குளுமையானது எனவே இந்த குளுமையான அருகம்புல்லை இறைவனுக்கு சாற்றுவதால் மன அமைதி கிடைக்கும்.


நைவேத்தியமாக பழங்கள் ஆப்பிள் மாதுளை ஆரஞ்சு சாத்துக்குடி விளாம்பழம் கொய்யாப்பழம் சீதாப்பழம் வாழைப்பழம் போன்ற பழங்கள் நைவதியமாக வைத்து வழிபாடு செய்வது சிறப்பு மேலும் பொங்கல் அவல் பொரி   கடலை சுண்டல் பாயாசம் லட்டு கரும்பு மோதகம் என தங்களுக்கு இயன்ற எளிமையான நைவேத்தியம் வைத்தும் வழிபாடு செய்வது சிறப்பு. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.


மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென்  தமிழுடன். எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்