சென்னை: அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் படம் தான் "பிறந்தநாள் வாழ்த்துகள்". இந்தப் படக்குழுவினர், காதலர் தினத்தில் தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்யாசமான முறையில், Valentine's Day Cheers என வெளியிட்டு அசத்தியுள்ளனர்.
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் தான் அப்புகுட்டி. இவர் அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். சுந்தரபாண்டியன் படத்தில் நகைச்சுவைத்தனத்துடன் வில்லனாகவும் நடித்தார். பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்த அப்புக்குட்டி தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகின்றார். அப்புக்குட்டி நாயகனாக நடித்து தயாராகியுள்ள படம் தான் பிறந்தநாள் வாழ்த்துகள்.

பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில்,ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ள படம் பிறந்தநாள் வாழ்த்துகள் . மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்' 'ஐ ஆம் ஏ பாதர்' என இரண்டு மலையாள படங்களை இயக்கிய ராஜு சந்திரா, தனது மூன்றாவது படமாக தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் படம் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
.jpg)
கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்திரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார்.விரைவில் திரைக்கு வர, தயாராகி வருகிறது "பிறந்தநாள் வாழ்த்துகள்"! படக்குழுவினர், காதலர் தினத்தில் தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்யாசமான முறையில், Valentine's Day Cheers என வெளியிட்டுள்ளனர்!
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}