- சுமதி சிவக்குமார்
சின்ன சேலம்: இப்போது நிலவும் இந்தக் கடுமையான குளிரில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு 10 மணிக்குத் தூங்கிய பிறகு திடீரென எழுந்திருக்கக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
தற்போது வீசி வரும் கடும் பனி மற்றும் குளிரின் காரணமாக உடலில் உள்ள இரத்தம் கெட்டியாகி, மெதுவாகச் செயல்பட்டு இதயத்தை முழுமையாக அடையாமல், உடலில் தங்கிவிடும். இதனால், குளிர்கால மாதங்களில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு காரணமாக அதிக விபரீத பாதிப்புகள் ஏற்படுமாம்.
எனவே கடும் குளிர்காலத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தூங்கும்போது காலையிலோ அல்லது இரவிலோ சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பவர்களுக்கு சிறப்புத் தகவல் ஒன்று உண்டு.

அதாவது படுக்கையை விட்டு எழுந்ததும் ஒரு மூன்றரை நிமிடங்களில் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும். இந்த மூன்றரை நிமிடங்கள் திடீர் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் ஆரோக்கியமானவர்கள் கூட இரவில் இறக்கின்றனர்.
அப்படி என்னதான் நடக்கும்?
இதற்கு முக்கிய காரணம், இரவில் சிறுநீர் கழிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும், திடீரென எழுந்திருப்பதால் இரத்தம் மூளைக்குச் செல்வதில்லை.
நாம் நடு இரவில் சிறுநீர் கழிக்க எழுந்திருக்கும் போது, நமது ECG முறை மாறக்கூடும். ஏனென்றால், நாம் திடீரென எழுந்திருக்கும் போது, இரத்தம் மூளைக்குச் செல்லாது, நமது இதயம் செயல்படுவதை நிறுத்திவிடும்.
எனவே இந்த சமயத்தில் நாம் கீழ்க்கண்டவற்றை பின்பற்றலாம்.
1. எழுந்தவுடன் உடனே நடக்காதீர்கள். அரை நிமிடம் படுக்கையில் விழித்தபடி படுத்திருங்கள்.
2. அடுத்த அரை நிமிடம் படுக்கையில் எழுந்து உட்காருங்கள்.
3. அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு உங்கள் கால்கள் படுக்கைக்கு அடியில் தொங்கட்டும்
மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்தம் இல்லாமல் இருக்காது, உங்கள் இதயம் செயல்படுவதை நிறுத்தாது. அதன் பிறகு சிறுநீர் கழிக்க போகலாம். இது திடீர் மரணங்களையும் குறைக்கும்.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
அனுபவம்!
திருப்பாவை திருத்தும் பார்வை!
My dear Santa.. என் இனிய சான்டா கிளாஸுக்கான ஆசைகள்!
மெகா ஸ்டார் மோகன்லாலின் ரூ. 421 கோடி சாம்ராஜ்ஜியம்.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
உடம்பு சரியில்லையா.. பேசாம சத்து மாவு கஞ்சி சாப்பிடுங்க.. செய்வதும் சுலபம்.. ஹெல்த்தியும் கூட!
சென்னை கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அதிரடி கைது
பனையூரில் தவெக தலைவர் விஜய் காரை மறித்த பெண் நிர்வாகியால் பரபரப்பு
{{comments.comment}}