சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு ரிசல்ட் இன்று வெளியானது. கடந்த ஆண்டு 94.3% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற்றது. இந்த பிளஸ் டூ பொதுத்தேர்வில் 3,58,201 மாணவர்கள் மற்றும் 4, 13,998 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவு இன்று வெளியானது.
+2 பொதுத்தேர்வில் தேர்வு எழுதியோரில் மொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.37% மாணவர்களும், 96.44% சதவீத மாணவியரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டம் தலா 97.42 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. அரியலூர் மாவட்டம் 97.25 சதவீத தேர்ச்சியுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில், கோயம்பத்தூர் 96.97% தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழ் பாடத்தில் 35 பேர் நூற்றுக்கு நூறு
தமிழ் பாடத்தில் 35 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஏழு பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 6,996 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6142 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். பொருளியலில் 3,299 பேரும், கணிதத்தில் 2,587 பேரும், உயிரியலில் 652 பேரும், வேதியலில் 471 பேரும், தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும், கணக்குப்பதிவியலில் 1647 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2251 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடத்தில் 210 பேரும், இயற்பியலில் 633 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 397 அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 95.49 சதவீதமும், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70% சதவிகிதமும் இருபாலர் பள்ளிகளில் 94.70 சதவீதமும் பாஸாகியுள்ளனர். மகளிர் பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதம் 96.39%. ஆகும்.
புதுச்சேரியில் 92.41% வெற்றி
புதுச்சேரியில் 92.41% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ்டூ தேர்வு எழுதிய 14,012 மாணவர்களில் 12,948 பேர் தேர்ச்சி அடைந்தனர். புதுச்சேரியில் 93.38% பேரும், காரைக்காலில் 87.03 சதவீதம் பேர் பாஸ் ஆகியுள்ளனர்.
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}