எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது.. பிரதமர் நரேந்திர மோடியின் குமரி முனை தியானம்?

May 31, 2024,12:28 PM IST

கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி  நேற்று தொடங்கிய தியானம், இன்று 2வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது. 


மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.


சூரியனை வணங்கிய பின்னர் 2வது நாள் தியானம்




இந்நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று தியானத்தை தொடங்கி, இன்றும் தியானம் செய்து வருகிறார். இன்று காலை சூரிய உதயத்தை பார்த்த நமஸ்காரம் செய்த பின்னர் தியான மண்டபத்திற்குள் சென்றார். அங்கு விவகானந்தர் சிலை முன்னர் அமர்ந்து காவி உடை மற்றும் கையில் ருத்திராட்சை மாலையுடன்  தியானம் மேற்கொண்டு வருகிறார்.


நாளை மாலை வரை, அதாவது கிட்டத்தட்ட 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சுற்றுலா பயணிகள் யாரும் விவேகானந்தர் பாறைக்கு அனுமதிக்கப்பட வில்லை. இன்று சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னர் விவேகானந்தர் பாறைக்கு அனுமதிக்கப்பட்டனர். 


சோதனைக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி:




பிரதமர் இருக்கும் பகுதிக்கு  யாருக்கும் அனுமதியில்லை. மற்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தியானம் முடிந்து நாளை மாலை 3 மணியளவில் அவர் வெளியே வருகிறார். அதன் பின்னர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். 


பிரதமர் மோடியின் தங்கலை முன்னிட்டு  குமரி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரை, ரவுண்டானா சந்திப்பு, மகாதானபுரம் சந்திப்பு மற்றும் குமரி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் 4000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். விவகானந்தர் பாறையை சுற்றி கடற்படை கப்பலில் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கிரீடங்களை விட, அரசியல் சாசனத்தின் மைத்துளி வலிமையானது!

news

பத்ம விருதுகள் ஏன் வழங்கப்படுகின்றன.. யாருக்கெல்லாம் அது கிடைக்கும்..?

news

சகலருக்கும் கிட்டியது வாக்கினும் மாபெரும் பரிசு.. குடியரசு!

news

தாயின் மணிக்கொடி பாரீர்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

கொண்டாட்டமாம் கொண்டாட்டம்.. குடியரசு தின விழா!

news

சோழர் காலத்தில் செழித்தோங்கிய மக்களாட்சி.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடவோலை முறை!

news

சுதந்திர இந்தியா குடியரசு நாடாக மாறிய வரலாறு!

அதிகம் பார்க்கும் செய்திகள்