எக்ஸ் தளத்தில் யாரு "டாப்"?: மோடிக்கு அடுத்த இடத்தில் இவரா??

Sep 05, 2023,05:04 PM IST
புதுடெல்லி: கடந்த 30 நாட்களில் ‘எக்ஸ்’ சமூக வலைதளப்பக்கத்தில் அதிக புதிய பாலோயர்களை பெற்ற இந்திய அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி முதலிடத்திலும், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 2வது இடத்திலும் உள்ளனர்.

டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அதன் பெயரை ‘எக்ஸ்’ என சமீபத்தில் மாற்றினார். இந்த நிலையில் ‘எக்ஸ்’ சமூக வலைதளம் சார்பில் அதில் கணக்கு வைத்துள்ள தனி நபர், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவைகளின் கணக்குகளில் கடந்த ஒரு மாதத்தில் (30 நாட்களில்) அதிகரித்த பாலோயர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.



இஸ்ரோவுக்கு மவுசு

இதில் இந்தியாவில் ஒரு மாதத்தில் அதிக பாலோயர்களை கொண்ட கணக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எனப்படும் இஸ்ரோ உள்ளது. சுமார் 11,66,140 பாலோயர்களை இஸ்ரோ கூடுதலாக பெற்றுள்ளது.

அரசியல்வாதிகளில் முதலிடத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. அவரது பாலோயர்கள் எண்ணிக்கை 6.32 லட்சம் அதிகரித்துள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இவர் ஒரு மாதத்தில் 2.67 லட்சம் பாலோயர்களை அதிகம் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி உள்ளார்.



விராட் கோலி



இதன்மூலம் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு அடுத்ததாக வேகமாக வளர்ந்துவரும் அரசியல் பிரபலமாக யோகி ஆதித்யநாத் திகழ்வது தெரிகிறது. இந்திய அளவில் இஸ்ரோ முதலிடத்திலும், பிரதமர் மோடி 2வது இடத்திலும், 4,74,011 புதிய பாலோயர்களுடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3வது இடத்திலும், யோகி ஆதித்யநாத் 4வது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்