சென்னை: தமிழகத்திற்கு இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி வாயிலாக 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதிலும் இதன் பயண செலவு மிகமிக குறைவு என்பதால் பேருந்துகளை விட ரயில்களையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் நீண்ட தூரம் பயணிக்க ரயில்கள் மிகவும் சௌகரியமாக இருப்பதாலும் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த வந்தே வாரத் ரயில் சேவை மிகக் குறைந்த நேரத்தில் சென்றடைவதால் இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு எழுந்து வருகின்றது. அதன்படி தமிழகத்தில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, சென்னை-பெங்களூர், கோவை-பெங்களூர், சென்னை-விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் பல்வேறு வந்தே பாரத் ரயில் சேவைகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதில் நாகர்கோவில் டூ சென்னை எழும்பூர், மதுரை டூ பெங்களூர் கண்டோமென்ட் என இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவை வரும் 31ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், சென்னை - நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயக்கப்படும். அதேபோல் பெங்களூர் டூ மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயக்கப்பட உள்ளது. இந்த இரண்டு ரயில் சேவைகளையும் வரும் 31ஆம் தேதி முதல் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் அன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}