சென்னை: சென்னை திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இன்று ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் விஜயவாடா - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில்களே அவை.
நெல்லை டூ சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை வந்து சேரும். இதன் பயண நேரம் 7 மணி 50 நிமிடங்களாகும். வழக்கமான ரயில்களில் 12 மணி நேர பயணம் செய்து நெல்லையிலிருந்து சென்னை வர வேண்டியிருக்கும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 8 மணி நேரத்துக்குள் வர முடியும் என்பதால் மக்களிடையே இது வரவேற்பைப் பெறும் என்று தெரிகிறது.
இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிற வந்தே பாரத் ரயில்கள்:
உதய்ப்பூர் - ஜெய்ப்பூர்
ஹைதராபாத் - பெங்களூரு
பாட்னா - ஹவுரா
காசர்கோடு - திருவனந்தபுரம்
ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி
ராஞ்சி - ஹவுரா
ஜாம்நகர் - அகமதாபாத்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}