கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தங்கி தியானம் செய்து வரும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2. 30 மணியளவில் அங்கிருந்து வெளியேறுகிறார். அதன் பின்னர் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று அஞ்சலி செலுத்தி சுற்றிப் பார்க்கவுள்ளார்.
3 நாள் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்து வருகிறார். கடந்த மே 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் முதலில் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். இதைத் தொடர்ந்து அவர் விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்திற்குச் சென்றார். அங்கு தொடர்ந்து தியானம் செய்து வருகிறார். இடை இடையே விவேகானந்தர் மண்டபத்துக்குள்ளேயே அவர் வாக்கிங்கும் போய்க் கொள்கிறார்.

மண்டப வளாகத்திலிருந்தே திருவள்ளுவர் சிலையையும் அவர் தினசரி கண்டு களித்தார். இந்த நிலையில், இன்று தியானம் முடிந்து விவேகானந்தர் பாறை மண்டபத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு அவர் வெளியே வருகிறார். தனி படகு மூலம் அவர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்கிறார். அங்கு சிலையைச் சுற்றிப் பார்க்கிறார். அஞ்சலி செலுத்துகிறார். அதை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் விவேகானந்தர் பாறைக்குத் திரும்பும் பி ரதமர் மோடி, தனிப் படகு மூலம் விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார்.
அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்று ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை:

பிரதமர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லவுள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல படகு குழாமிலும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி, விவேகானந்தர் பாறையிலிருந்து கிளம்பிச் சென்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}