புது டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட வேண்டும். கூட்டத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். ஆனால் இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
2024- 25 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது உரையுடன் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகத்தை சிறுமைபடுத்த கூடாது.
நாட்டில் பெண் சக்தியின் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. பெண் குடியரசுத் தலைவர் புதிய நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்துள்ளார். நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செயயவுள்ளார் என்று கூறினார் பிரதமர் மோடி.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}