ராமேஸ்வரம்: பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரதமர் வருகையை ஒட்டி சென்னை மற்றும் அவர் பயணம் செய்ய உள்ள பிற மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் கடந்த 12ஆம் தேதி முதல் விரதம் இருந்து வருகிறார். மேலும் அவர் நாட்டில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனமும் செய்து வருகிறார்.
திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். நாளை ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு, மதியம் 12:55 மணி அளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டு செல்கிறார். மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீர் சேகரிக்க உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி ராமேஸ்வரத்தில் உள்ள 12 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் தங்குவதற்காக இந்த 12 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
தனது ராமேஸ்வரம் பயணத்தை முடித்த பிறகு, ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்ல உள்ளார் பிரதமர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}