பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு கடும் நடவடிக்கை... பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை

Aug 26, 2024,10:17 AM IST

டில்லி :   பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.




சுய தொழில் புரிவோருக்கான விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பெண்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். நான் மீண்டும் சொல்கிறேன் ஒவ்வொரு மாநில அரசும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மன்னிக்க முடியாதது. குற்றவாளி யாராக இருந்தாலும் சரி அது பற்றி கவலையில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். கொல்கத்தாவில் பெண் டாக்டர்கள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரதமரின் இந்த வார்த்தை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


மேலும் அவர் கூறுகையில், பெண்களுக்கான குற்றங்கள் செய்வோருக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டங்களை கடுமையாக்கி, பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார். 


சுயதொழில் புரிவோர் குறித்து பேசி பிரதமர், சுயதொழில் புரியும் உறுப்பினர்களின் குடும்பங்களின் ஆண்டு வருமாவம் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த வருமானம் அவர்களின் நான்கு போக விவசாயத்திற்கு ஆகும் செலவையும், தொழில்களுக்கு முதலீடு செய்யவும் உதவும். அவர்களின் மாத வருமானமும் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது என்றார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்