பெங்களூரு: டெக் சிட்டியாக திகழும் பெங்களூரு நகரை, தண்ணீருக்காக மக்களை அலைய விட்டு டேங்கர் சிட்டியாக மாற்றி விட்டது இங்குள்ள காங்கிரஸ் அரசு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதியும் இரண்டாவது கட்டத் தேர்தல் மே 7ஆம் தேதியும் நடைபெறும். பெங்களூரில் உள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் தேவெ கெளடா உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசை கடுமையாக சாடிப் பேசினார். பிரதமரின் பேச்சிலிருந்து சில துளிகள்:

டெக் சிட்டியாக திகழ்ந்துவரும் பெங்களூரை டேங்கர் சிட்டியாக மாற்றிவிட்டது காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் அரசு முதலீட்டாளர்களுக்கு எதிரானது. சிறு தொழில் முனைவோருக்கு எதிரானது. தனியார் துறையினருக்கு எதிரானது. வரி கட்டுவோருக்கு எதிரானது. மாறாக பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக மட்டுமே அது இருக்கிறது. இந்தியாவை பசுமை மின்சார மையமாக, பார்மசூட்டிக்கல் மையமாக, எலக்ட்ரானிக் பொருட்களின் மையமாக, எலக்ட்ரானிக் வாகனங்களின் மையமாக, செவி கண்டக்டர்களின் மையமாக நாங்கள் மாற்றி இருக்கிறோம்.
இந்திய பொருளாதாரத்தை மிகப்பெரிய ஒரு சக்தியாக மாற்றி இருக்கிறோம். ஆனால் மோடியை அகற்றுவதன் மூலம் இவற்றையெல்லாம் அகற்ற முடியும் என்ற இறுமாப்பில் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் செயல்பட்டு வருகின்றன. 5ஜி தருவதாக மோடி உத்திரவாதம் கொடுத்தேன். இப்பொழுது 6g தருவதாக நான் உத்தரவாதம் கொடுக்கிறேன், ஆனால் அவர்களோ மோடிய அகற்ற வேண்டும் என்பதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றனர். செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வருவேன் என்று நான் உத்தரவாதம் கொடுத்தேன். ஆனால் அவர்களோ மோடியை அகற்றுவோம் என்று உத்தரவாதம் கொடுக்கிறார்கள். சந்திரயாணுக்கு செல்வோம் என்ற உத்தரவாதத்தை நான் கொடுத்தேன், ககன்யான் திட்டத்திற்காக நாடு பெருமை படுகிறது. ஆனால் அவர்களுக்கோ மோடியை அகற்றுவது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருக்கிறது.
கர்நாடகா மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காகவே பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து செயல்படுகின்றன. உங்களது கனவுகள் அனைத்தும் நனவாகும், உங்களது வாழ்க்கை மேம்படும். எனது வாழ்க்கையை நான் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்து உள்ளேன். 2047 ஆம் ஆண்டுக்காக நாம் அனைவரும் இரவு பகலாக இணைந்து பாடுபடுவோம். 2047 ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக தலை நிமிர்ந்து நிற்கும் என்பதை நான் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.
கர்நாடகா மாநில அரசு விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை நகர்ப்புற அடிப்படைக் கட்டமைப்புக்காக செலவிடுகிறது. ஊழலில் மட்டுமே அது கவனம் செலுத்துகிறது. பெங்களூர் பிரச்சனையில் அது கவனம் செலுத்துவதில்லை. மத்திய அரசின் திட்டங்களை அது முறைப்படி செயல்படுத்துவதில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் மிகவும் அபாயகரமாக இருக்கின்றன. நமது மகள்கள் தாக்கப்படுகிறார்கள், மார்க்கெட்டுகளில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறுகின்றன, பொதுமக்கள் மத வழிபாட்டு பாடல்களைப் பாட அனுமதி மறுக்கப்படுகின்றனர். இவையெல்லாம் சாதாரணமானவை அல்ல .. எனது சகோதர சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.. காங்கிரஸிடம் மிகவும் விழிப்புணர்வுடன் எச்சரிப்புடன் இருங்கள் என்பதே என்று பிரதமர் மோடி பேசினார்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}