டெல்லி: மகளிர் தினத்தையொட்டி வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை உச்சத்தில் உள்ளது. இதைக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், இன்று மகளிர் தினம். வீட்டுஎரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்க உதவும். குறிப்பாக பெண்களுக்கு இது பலன் தரும்.
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைப்பதன் மூலம் குடும்பங்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சியில் நாங்களும் தோள் கொடுக்கிறோம். மேலும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தவும் இது உதவும். பெண்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற வேண்டும், அவர்களது வாழ்க்கை எளிதாக வேண்டும் என்ற எங்களது உறுதியில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}