சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள். இதையட்டி அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77வது பிறந்த நாள் விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவருடைய பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவீட்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், அர்ப்பணிப்புள்ள பொது வாழ்க்கையின் உதாரணமாக விளங்கும் காங்கிரஸ்சின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது அனுபவம் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே வெளியிட்ட வாழ்த்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக தைரியம், துணிச்சல் மற்றும் தன்னலம் மற்ற தியாகத்துடன் போராடிய அவர் கருணையின் அடையாளமாக இருந்துள்ளார். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}