பிரதமர் மோடி சந்திக்கும் 2வது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்..!

Aug 08, 2023,10:02 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு சந்திக்கும் 2வது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இதுவாகும். கடந்த முறை அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த சந்திரபாபு நாயுடு தற்போது மோடிக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது.

பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தார். அது முதல் தொடர்ந்து கடந்த 9 வருடங்களாக பிரதமராக இருந்து வருகிறார். அவரது முதல் ஆட்சியே பெரும்பான்மை பலத்துடன்தான் அமைந்தது. இதனால் தொடர்ந்து அவரது அரசு ஆணித்தரமாகவே செயல்பட்டு வருகிறது. 2வது முறை ஆட்சியைப் பிடித்தபோது அறுதிப் பெரும்பான்மையுடன் அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தார் பிரதமர் மோடி.

மோடி அரசைப் பொறுத்தவரை தற்போது 2வது முறையாக அது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சந்திக்கிறது. இதற்கு முன்பு 2018ம் ஆண்டு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அதைக் கொண்டு வந்தவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. அந்தத் தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் விழுந்தன. இதனால் தீர்மானம் தோற்றுப் போனது.

தற்போது நாடாளுமன்றத்தில் மொத்தம் 570 உறுப்பினர்கள் உள்ளனர். இதில்  பெரும்பான்மைக்குத் தேவையானது 270 ஆகும். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வசம் 332 எம்.பிக்கள் உள்ளனர். இதைத் தவிர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், ஓபிஎஸ் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களையும் சேர்த்தால் அரசுக்கு 366 பேரின் ஆதரவு கிடைக்கிறது. மறுபக்கம் இந்தியா கூட்டணி  வசம் 142 உறுப்பினர்களே உள்ளனர். எனவே தீர்மானம் தோற்பது உறுதியானது. இருப்பினும், பிரதமரை பேச வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இதைக் கொண்டு வந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்