காங்கிரஸ், திமுகவை குறி வைத்து பிரதமர் மோடி கடும் தாக்கு!

Aug 10, 2023,07:18 PM IST

டெல்லி: நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது காங்கிரஸையும், திமுகவையும் கடுமையாக குறி வைத்துத் தாக்கிப் பேசினார்.


நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்து வந்தது. இன்று பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துப் பேசினார். அவரது உரை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இதில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் தனது அரசின் சாதனைகள் அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து மட்டுமே இருந்தது. கடைசிக்கட்டமாகத்தான் அவர் மணிப்பூர் குறித்துப் பேசினார்.


தனது பேச்சின்போது அவர் காங்கிரஸை மிகக் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசினார். நாட்டை பிளவுபடுத்தியது பாஜக அல்ல, காங்கிரஸே என்று மோடி பேசினார்.  காஷ்மீரில் பற்றி எரியவும், தீவிரவாதம் தலைவிரித்தாடவும் காங்கிரஸே காரணம் என்று மோடி தாக்கிப் பேசினார்.




தமிழ்நாடு, மேற்கு வங்காளம், நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸை மக்கள் முழுமையாக நிராகரித்து விட்டனர். அங்கெல்லாம் காங்கிரஸால் ஆட்சிக்கே வர முடியாது என்றும் கடுமையாக சாடினார்.


வட கிழக்கில் குறிப்பாக மிஸோரமில்  கடந்த 1966ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது மக்களை குண்டு வீசித் தாக்கியதாக பிரதமர் குற்றம் சாட்டினார். ஏன் சொந்த மக்களையே குண்டு வீசித் தாக்கிக் கொன்றீர்கள் என்று அவர்களை கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் உண்மையை மறைக்க விரும்புகிறது. தனது பாவங்களைக் கழுவத் துடிக்கிறது.


வட கிழக்கு மாநில மக்களின் நம்பிக்கையை கொன்ற கட்சி காங்கிரஸ்தான். 1962ம் ஆண்டு அஸ்ஸாம் மக்களுக்காக தனது இதயம் துடிப்பதாக ஜவஹர்லால் நேரு வானொலியில் உரையாற்றினார். ஆனால் இந்தியா - சீனா போரின்போது அஸ்ஸாம் மக்களை அவர் கைவிட்டு விட்டார்.


வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதை நேரு விரும்பவில்லை. அதை நான் சொல்லவில்லை, ராம் மனோஹர் லோஹியாவே சொல்லியுள்ளார். 


பாரத மாதா குறித்து இங்கு சிலர் தவறாகப் பேசியதைக் கேட்டேன். அது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.  பொதுத்துறை நிறுவனங்களை கொன்று விட்டோம். நாட்டைப் பிளந்து விட்டோம் என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் 1947ம் ஆண்டு நாட்டை மூன்று துண்டாக பிரித்தது இவர்கள்தான்.  குறிப்பிட்ட சமுதாயத்தை தாஜா செய்து நடத்திய அரசியல்தான் நாட்டின் பிரிவினைக்கு வித்திட்டது. வந்தே மாதரத்தை அவர்கள் உடைத்தனர். 


திமுக மீது தாக்கு


இன்று யாரெல்லாம் வெளி நடப்பு செய்துள்ளனர். திமுக வெளிநடப்பு செய்துள்ளது. கச்சத்தீவு என்றால் என்ன.. அது எங்கே இருக்கிறது. திமுக அரசின் முதல்வர் கடிதம் எழுதுகிறார்.  கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறுகிறார். கச்சத்தீவை யார் இலங்கைக்குக் கொடுத்தது.. இந்திரா காந்திதான் கொடுத்தார். காங்கிரஸுடன் சேர்ந்து கொண்டு திமுக வெளிநடப்பு செய்கிறது. என்ன இதெல்லாம் என்றார் பிரதமர் மோடி.


மோடியின் பேச்சின்போது காங்கிரஸை சாடியது போலவே, திமுகவையும் உதாரணத்திற்கு இழுத்து வந்து கடுமையாக குற்றம் சாட்டிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்