டெல்லி: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி, வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எ்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
வளர்ச்சி வென்றுள்ளது.. நல்லாட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.. இணைந்திருந்தால் வானத்தையும் தாண்டி வெல்லலாம் என்பதை உணர்த்தியுள்ள முடிவு இது.
மகாராஷ்டிர மாநில சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்ததற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் மீது காட்டியுள்ள அன்பும், பாசமும் ஒப்பிட முடியாதது.
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக எங்களது கூட்டணி தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதிமொழியை இப்போது அளிக்கிறேன். ஜெய் மகாராஷ்டிரா என்று கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு தொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், ஜார்க்கண்ட் மாநில மக்கள் எங்களுக்கு தெரிவித்த ஆதரவுக்கு அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மக்கள் பிரச்சினைகளை உரிய இடத்தில் எழுப்பவும், மாநிலத்தின் நலனுக்காக உழைப்பதிலும் பாஜக முதலிடத்தில் இருக்கும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியின் சிறந்த தேர்தல் செயல்பாட்டுக்காக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரதமர்.
நாடு முழுவதும் நடந்த தேர்தலுக்காக தீவிரமாக களப் பணியாற்றிய பாஜகவினருக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}