கன்னியாகுமரி: கன்னியாகுமரி, விவேகானந்தர் பாறையில் கடந்த மூன்று நாட்களாக தியானத்தை மேற்கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் தியானத்தை முடித்துக் கொண்டு திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்த பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானத்தை தொடங்கினார். கடந்த 18 மணி நேரமாக தியானம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது தியானத்தை விட்டு வெளியே வந்து சூரிய நமஸ்காரம் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
காவி உடையுடன், கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருநீர் பட்டை அணிந்து கொண்டு நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி தியானத்தை செய்து வருவதாக தகவல் வெளியானது. இதனுடன் மௌனம் விரதமும் இருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எதிர் கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் இன்று மாலை 3: 25 மணி அளவில் விவேகானந்தர் பார்வையை விட்டு வெளியே வந்து திருவள்ளுவர் சிலைக்கு வந்தார் பிரதமர் மோடி. அங்கு மலர் தூவி வள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து படகுமூலம் கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்று ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரியை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தது. பிரதமர் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டு வந்ததால், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் அவ்வப்போது தடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பிரதமர் கிளம்பிச் சென்று விட்டதால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீங்கியுள்ளன.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}