சென்னை: எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு காலத்தில் ஒருவர் கூட படிக்காத சமுதாயமாக வன்னியர் சமுதாயம் இருந்தது. இன்றைக்கு 5,000 வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ள நிலையில், எல்லோரும் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள். சமூக நீதி என்றால் இந்திய அளவில் பேசக்கூடியவர் என்னைத் தவிர யாரும் கிடையாது. சிலரால் கூட்டத்திற்கு வர முடியவில்லை. நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை.

வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி கலந்து கொள்வார். எங்களுக்குள் மனக்கசப்பு எதுவும் இல்லை. இனிப்பான செய்திகளை தான் நான் சொல்வேன். இதுவரை சொல்லியுள்ளேன். மருத்துவர் என்பதால் கசப்பான மருந்துகளை கூட நான் தருவதில்லை. சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறையாது. அதனால்தான் நீச்சல் குளத்தில் குளித்த வீடியோவை வெளியிட்டேன். அன்புமணி ராமதாசை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளிவந்தன. அதை நான் செய்வேனா என கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}