சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போட்டுள்ள ஒரு எக்ஸ் தளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
பார்வையற்ற சிலர், யானை சிலையை தடவிப் பார்த்து ஆளுக்கு ஒரு கருத்து கூறுவார்களே அதுபோல ஒவ்வொரு அர்த்தம் எடுத்து இதற்கு பொருள் கூறி வருகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் களம் டோட்டலாக மாறியுள்ளது. எல்லாக் கட்சிகளும் விஜய்யின் தவெக பக்கம் திரும்பி நிற்கின்றன. விஜய் பேசிய பேச்சின் சூடே இன்னும் ஆறவில்லை. அடுத்தடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. அவரது தலைமையில் அமையப் போகும் கூட்டணி என்னவாக இருக்கும், யாரெல்லாம் அவருடன் அணி சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
திமுக ஒரு பக்கம் எதிர்ப்பு காட்ட தயாராகி நிற்கிறது. நாம் தமிழர் கட்சி மறுபக்கம் முனைப்புடன் எதிர்த்து வருகிறது. பாஜக சைலன்ட்டாக கவனித்துக் கொண்டுள்ளது. அதிமுக அமைதி காக்கிறது. இப்படி ஆளுக்கு ஒரு நிலைப்பாட்டுடன் இருந்தாலும் அத்தனை பேரின் பார்வையும் தவெக மீது மட்டுமே இருக்கிறது என்பதே நிதர்சனம்.
இந்த கலாட்டாவுக்கு மத்தியில் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், பாமக, தேமுதிக போன்ற 2ம் நிலை கட்சிகளின் நிலைப்பாடு பெரிதாக தெரியவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் ஆரம்பத்திலேயே விஜய்யை கடுமையாக விமர்சித்து விட்டது. அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையான பேட்டிகளையும் கூட கொடுத்தார். ஆனால் அவரும் விஜய்யும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் ஏறப் போவதாக வெளியான செய்திகளால் குழப்பமே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சத்தம் போடாமல் ஒரு டிவீட் போட்டு விட்டு எல்லாரையும் மண்டை காய வைத்து விட்டார். அவர் போட்ட டிவீட் இதுதான்...
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல; கால வகையினானே"
இந்த டிவீட்தான் தற்போது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சங்க கால புலவரான பவணந்தி எழுதிய பாடல்தான் இது. பழையவை அழிதலும், புதியவை அந்த இடத்திற்கு வருவதும் இயற்கையானதே. அதைத் தவிர்க்க முடியாது என்ற அர்த்தம் தரும் வரிகள் இவை. போகி பண்டிகைக்குதான் பெரும்பாலும் இந்த பாடல் வரிகளை பலரும் நினைவு கூர்ந்து வாழ்த்துவார்கள், பேசுவார்கள். ஆனால் அந்த பாடல் வரியை இப்போது டாக்டர் ராமதாஸ் கூற என்ன காரணம் என்று தெரியவில்லை.
பழைய கூட்டணிகள் முடியப் போகின்றன. புதிய கூட்டணிகள் வரப் போகின்றன என்ற அரசியல் கருத்தை சொல்லாமல் சொல்கிறாரா டாக்டர் ராமதாஸ் என்று சிலர் கேட்டு விவாதிக்கிறார்கள்.
விஜய்யின் வரவு தவிர்க்க முடியாதது.. அவரால் பழைய கட்சிகளுக்கு பாதிப்பு வரப் போகிறது என்பதை சொல்லாமல் சொல்கிறாரா டாக்டர் ராமதாஸ் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருவேளை மறைமுகமாக விஜய்யை அவர் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளாரா என்ற பார்வையும் சிலரால் பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற பூடகமான டிவீட் போடுவதில் டாக்டர் ராமதாஸ் நிபுணர் ஆவார். பலமுறை இதுபோல பூடகமாக போட்டு கலங்கடித்துள்ளார் டாக்டர் ராமதாஸ். அந்த வகையில் இந்த டிவீட் கூடுதல் கலகலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}