சென்னை: என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாமே அய்யா தான் என சொல்லிக்கொண்டே என்னை அதள பாதாளத்தில் தள்ளுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், சிறுமைப்படுத்துகிறார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பாமக கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே வார்த்தை மோதல் போக்கு இருந்து வருகிறது. பல குழப்பங்கள் கட்சியில் இருந்து வரும் நிலையில், தந்தை மகனிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக நிலைக்கு கொண்டு வர பாமக கட்சியின் ஒரு சாரர் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில், இன்று பாமக கட்சியில் சுமூக நிலை காணப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் அந்த கட்சியில் புதிது புதிதாக பிரச்சனைகள் உருவாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இன்று தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
டிராவில் முடிந்தது அன்புமணி உடன் ஆன பேச்சுவார்த்தை:
அன்புமணி உடன் ஆன பேச்சுவார்த்தை டிராவில் முடிவடைந்தது. அதற்கு முன்பாக 16 பஞ்சாயத்து நடந்தது. நான் தொடங்கிய 36 அமைப்புகளை சேர்ந்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தார்கள். அதை தலைவிதி என ஏற்று கொண்டேன். பஞ்சாயத்து செய்ய வந்த அனைவரும் ஒரே விதமான தீர்ப்பை சொன்னார்கள். என்ன தீர்ப்பு என்றால், நான் இங்கே இருந்து கொண்டு கட்சி வளர்ப்பது, அவர் வெளியே சென்று கட்சி வளர்ப்பது என்று தீர்ப்பு தான். அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என கூறினேன். மாநாட்டுக்கு முன்பாக அன்புமணி பார்த்து விட்டு வாருங்கள், தலைவர் பதவியை விட்டுத்தருகிறேன் என கௌரவ தலைவரை அனுப்பினேன். மாநாடு மேடையிலேயே கையெழுத்து போட்டு தர தயாராக இருப்பதாக கூறினேன். அதற்கும் ஏற்கவில்லை. அதனால், இயற்கையான கோபம் வந்து நீயா நானா பார்த்து விடுகிறேன் என வந்து விட்டேன்.
நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தைப் பிடித்து தள்ளும் நிலை:
மக்களோடு 46 வருடங்களாக பழகி வருகிறேன். அவர்கள் என்னை உயிராக நினைத்து வருகிறார்கள். அவர்களை நான் உயிருக்கும் மேலாக கடவுளாக நினைக்கிறேன். அவர்கள் என்னை குலதெய்வமாக நினைக்கிறார்கள். நான் அவர்களை தொண்டர்களாக அல்ல வழிகாட்டிகளாக நினைக்கிறேன். இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? உரிமை இல்லையா? என்று கேட்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தைப் பிடித்து தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருக்கின்றன. என்னை பார்க்க வரும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடம் தொலைபேசியில் பேசி அவரை தடுத்து நிறுத்துகிறார்கள். அன்புமணி அமைதியாக காத்திருந்தால், அன்புமணிக்கு தானாக தலைமை வந்திருக்கும்.
வரும் தேர்தலில் கூட்டணியை நான்தான் முடிவு செய்வேன்:
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை பாமகவிற்கு நான் தான் தலைவர். அன்புமணியின் செயல்பாடு காரணமாகவே அவரின் தலைவர் பதவியை நான் எடுத்து கொள்கிறேன். வரும் தேர்தலில் கூட்டணியை நான்தான் முடிவு செய்வேன். கோலூன்றி நடந்தாலும் மக்களுக்காக பாடுபடுவேன். பாமக பொதுச்செயலாளர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. 5 ஸ்டார் ஓட்டலில் மதுவோடு இருக்கிறாரா? அவர் மிதந்து கொண்டு இருப்பதாக தகவல் வந்தது. பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு. 2026 தேர்தலுக்கு பின்னர் எல்லாவற்றையும் அன்புமணி தான் பார்த்துக் கொள்ள போகிறார். அன்புமணியுடனான பிரச்சனைக்கு தீர்வே இல்லை என்றுதான் எண்ணுகிறேன். முயலுக்கு 3 கால் என்று வாதிட்டு கொண்டிருக்கிறார் அன்புமணி.
பாமகவின் தொண்டர்களும், வாக்காளர்களும் எனது பக்கமே:
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாமே அய்யா தான் என சொல்லிக்கொண்டே என்னை அதள பாதாளத்தில் தள்ளுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், சிறுமைப்படுத்துகிறார்கள். பாமகவின் தொண்டர்களும், வாக்காளர்களும் எனது பக்கமே உள்ளார்கள். என்னை படைபிணமாக்கி விட்டு நடைபயணம் செல்கிறார்கள். எல்லாமே நாடகம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் ஆக., 3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள Z பிரிவு y பிரிவு ... மறைமுகமாக தவெகவை தாக்கிய சீமான்!
ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
60 வயதிலும் 20 வயது இளைஞர் போல இருக்கணுமா.. அப்படீன்னா இதை பாலோ பண்ணுங்க!
துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் வெளியீடு!
{{comments.comment}}