அவசரச் சிகிச்சை... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி

Apr 13, 2026,05:14 PM IST

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் பாமக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடந்தது என்ன?


தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்த கட்சியினர் மற்றும் பாதுகாவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


சென்னைக்கு மாற்றம் : 




சேலத்தில் அவருக்குத் தேவையான முதற்கட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும், மேல் சிகிச்சைக்காகவும் விரிவான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இன்று (ஏப்ரல் 13, 2026) அதிகாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.


தற்போதைய உடல்நிலை :


தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் டாக்டர் ராமதாஸ் இருந்து வருகிறார். அவருக்கு இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது."டாக்டர் ராமதாஸின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. நீண்ட நேரப் பயணம் மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே இந்த மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாகத் தெரிகிறது. அவர் நலமுடன் உள்ளார், யாரும் அச்சப்படத் தேவையில்லை." என மருத்துவமனை தரப்பில் சொல்லப்படுகிறது.


குவிந்த தண்டர்கள் :


டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதை அடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனை முன்பு பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அவருடன் உள்ளனர். அரசியல் தலைவர்கள் பலரும் டாக்டர் ராமதாஸ் விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தொடர் பிரச்சாரத்தால் ஏற்பட்ட களைப்பே இந்த உடல்நலக் குறைவுக்கு முக்கியக் காரணம் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்