பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுமியும், அவரது தாயாரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் துன்புறுத்தல் செய்தாக புகார் எழுந்துள்ளது. இதை வெளியே கூறக்கூடாது என்றும், கூறினால் பல்வேறு பிரச்சனைகள் எழும் என்று, எடியூரப்பா மிரட்டியதாகவும் சிறுமியின் தாயார் போலீஸில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்.
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு சதாசிவநகர் போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஎஸ் எடியூரப்பா கர்நாடகாவில் 3 முறை முதல்வராக பதவி வகித்தவர். பாஜகவின் மூத்த தலைவர்களுள் முக்கியமானவர். பலம் வாய்ந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். 2021ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.
18 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா மீது பாய்ந்த இந்த வழக்கால் கர்நாடகவில் உள்ள அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "என்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன். புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}