சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பதிவில் நினைவாஞ்சலி செலுத்தியுள்ளார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் சென்னை ஓமந்தூர் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்துவும் கலைஞரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன் எக்ஸ் பக்கத்தில் கலைஞரின் நினனவை கூறும் வண்ணம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உன்
பிறந்தநாளுக்கும்
நினைவுநாளுக்கும்
வேறுபாடு ஒன்றுண்டு
நீ பிறந்த நாளில்
ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே
பிள்ளையாகினாய்
நினைவு நாளில்
தாய்த் தமிழ் நாட்டுக்கே
மகனாகினாய்
குடகுமலை மழையால்
மேட்டூர் நீர்மட்டம்
உயர்வது மாதிரி
ஒவ்வோர் ஆண்டிலும்
உன் புகழ்மட்டம்
கூடிக்கொண்டே போகிறது
வணங்குகிறோம் உங்களை;
வாழ்த்துங்கள் எங்களை என்று கூறியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}